Home /News /entertainment /

இயக்குநர் சிவா வீட்டில் 3 மணி நேரம் இருந்த ரஜினிகாந்த்... என்ன பரிசளித்தார் தெரியுமா?

இயக்குநர் சிவா வீட்டில் 3 மணி நேரம் இருந்த ரஜினிகாந்த்... என்ன பரிசளித்தார் தெரியுமா?

சிவா - ரஜினிகாந்த்

சிவா - ரஜினிகாந்த்

சிவாவின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளித்திருக்கிறாராம் ரஜினிகாந்த். அதோடு 3 மணி நேரம் அவரது வீட்டிலும் இருந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இயக்குநர் சிவா வீட்டிற்கு தீடீர் விசிட் அடித்த நடிகர் ரஜினிகாந்த், அவரது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

    சிவா இயக்கத்தில் வெளியான வீரம், விஸ்வாசம் போன்று கூட்டு குடும்பப் பின்னணியில் அண்ணாத்த படமும் தயாராகியிருந்தது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பு தனது குடும்பத்தினருடன் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அனைவரும் அண்ணாத்த படத்தை வெகுவாக ரசித்ததாகவும், குறிப்பாக தனது பேரன் வேத், தன்னை வெகுவாக பாராட்டியதாகவும் ஹூட் ஆப்பின் மூலம் பதிவு செய்திருந்தார்.

    தனது அப்பாவுடன் இயக்குநர் சிவா மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற கோரிக்கையையும் வைத்திருந்தார் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா. இந்நிலையில் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

    இதையடுத்து சிவாவின் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டி தங்கச் சங்கிலி பரிசளித்திருக்கிறாராம் ரஜினிகாந்த். அதோடு 3 மணி நேரம் அவரது வீட்டிலும் இருந்திருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் சிவாவின் குடும்பத்தினர். இதைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி - சிவா கூட்டணி இணைகிறதா என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி