முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பெங்களூரு சிவராத்திரி விழாவில் தியானத்தில் ரஜினிகாந்த்... அண்ணனுக்கு மரியாதை... வைரலாகும் படங்கள்

பெங்களூரு சிவராத்திரி விழாவில் தியானத்தில் ரஜினிகாந்த்... அண்ணனுக்கு மரியாதை... வைரலாகும் படங்கள்

மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த்

மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மிகவும் பிரபலம். பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு நடனமாடி உற்சாகமாக கொண்டாடுவர்.

இதன் ஒரு பகுதியாக கோவை ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவைப் போலவே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மகா சிவராத்திரி விழாவும் மிகவும் பிரபலம். அங்கு இந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்திரி நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார்.

மனைவி லதாவுடன் தியானத்தில் ஈடுபடும் ரஜினிகாந்த்

இந்த நிலையில் ரஜினிகாந்த் தியானத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிவருகின்றன. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தனது அண்ணன் சத்ய நாராயணாவுடன் ரஜினிகாந்த்

மேலும் தனது அண்ணன் சத்யநாராயணாவுடன் இருக்கும் படமும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கின்றன. பெங்களூருவில் உள்ள தனது சகோதரரின் வீட்டில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்தின்போது இந்தப் படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Rajinikanth