”பாடும் நிலா.. எழுந்து வா!” - பாடகர் எஸ்.பி.பி மீண்டு வரவேண்டுமென கூட்டுப் பிரார்த்தனைக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்..

ரஜினிகாந்த் | மருத்துவமனையில் எஸ்.பி.பி.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலம் பெற அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 • Share this:
  கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கடந்த 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வெண்டிலேட்டர், எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  அவர் மீண்டும் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த நிலையில், இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரையுலகினரும் ஒன்றிணைந்து இயற்கை அன்னையை பிரார்த்தித்து இன்று 20.8.2020 மாலை 6.00 மணிக்கு எஸ்.பி.பி.யின் பாடலை ஒலிக்கவிட்டு அவர் நலம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று பாரதிராஜா நேற்று அறிவித்தார்.

  ரஜினிகாந்த் வேண்டுகோள்


  இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாடும் நிலா... எழுந்து வா. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம். இன்று மாலை 6.00 முதல் 6.05 வரை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: