Home /News /entertainment /

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… இன்று முதல் ஷூட்டிங்

ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… இன்று முதல் ஷூட்டிங்

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Jailer First Look : ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மிரட்டலாகவும், ஈர்க்கும் வகையிலும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஃபர்ஸ்ட் லுக் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. படப்பிடிப்பு இன்று முதல் நடைபெறும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

    நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தொடங்கியுள்ளது.

    இன்று காலை முதல் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது.

    Jailer: ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியது!

    அதில் நடிகர் ரஜினிகாந்த், சால்ட் அண்ட் பேப்பர் முடி தாடியுடன் நடந்து வருவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ரஜினிகாந்தின் அந்த தோற்றம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.



    இன்று தொடங்கியுள்ள ஜெயிலர் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெறுகின்றனர்.

    மகன் யாத்ராவால் மீண்டும் இணைந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரலாகும் புகைப்படம்

    பீஸ்ட் படத்தால் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார், ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி