ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசையமைப்பாளர் தேவாவை பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ

இசையமைப்பாளர் தேவாவை பாராட்டிப் பேசிய ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ

ரஜினிகாந்த் - தேவா

ரஜினிகாந்த் - தேவா

சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்தபின் அவரது உடலை கொண்டுசென்றபோது, பலநாட்டின் தலைவர்கள் முன்னிலையில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தேனிசைத் தென்றல் தேவாவின் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றார். விழாவில் அவர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  இசையமைப்பாளர் தேவாவின் 72-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை   கொண்டாடப்பட்டது.  அதனை முன்னிட்டு தேவா தி தேவா என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட  திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

  நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் தேவா இசையமைத்த பல பாடல்கள் தனக்கு வெற்றியை பெற்று தந்தாக தெரிவித்தார். மேலும் சிங்கப்பூரின் சிற்பி என அழைக்கப்படும் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன்,    தேவா இசையமைத்த, ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து  பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியதாகவும்  அதை எனது இறுதி ஊர்வலத்தில் அப்பாடலை ஒலிக்க வைக்க வேண்டும் என உயில்  எழுதி வைத்ததாக குறிப்பிட்டார்.

  மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை’ படத்தின் ஷூட்டிங் தொடக்கம்… உதயநிதி தொடங்கி வைத்தார்…

  சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்தபின் அவரது உடலை கொண்டுசென்றபோது, பலநாட்டின் தலைவர்கள் முன்னிலையில் தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் ஒலிப்பரப்பப்பட்டது.

  நடிகர் அப்பாஸிற்கு அறுவை சிகிச்சை… விரைவில் வீடு திரும்புவேன் என ஃபேஸ்புக்கில் பதிவு…

  சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் அந்த பாடலின் அர்த்தத்தை மொழிபெயர்த்து  பத்திரிக்கையில் விளக்கியிருந்தாக குறிப்பிட்ட ரஜினிகாந்த்,  எந்த தமிழ் ஊடகமும் அதுகுறித்து எழுதவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

  ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு பிறகு எஸ்.ஆர். நாதனின் இறுதி ஊர்வல  நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட எஸ். ஆர் நாதனின் மூதாதையர்கள் பிறந்த  ஊர் எது என்பதை அறிந்துக்கொள்ள எஸ்.ஆர். நாதன் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் அதனை உறுதி செய்ய முடியவில்லை.

  தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடலில்  தஞ்சாவூரை சுற்றிய பல  சிறிய ஊர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில்   எதாவது ஒன்று அவர்களின் பிறந்த ஊராக இருக்கலாம் என்று அவர் நம்பியதாக கூறப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Rajinikanth