ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு கூத்து பாடல் சர்வதேச விருதான கோல்டன் குளோபை பெற்றுள்ளது. இதையொட்டி படத்தின் இயக்குனர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருக்கு ரஜினிகாந்த் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை பாகுபலி படங்களை இயக்கிய ராஜமவுலி இயக்கியிருந்தார். அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்த படத்திற்கு இசையமத்திருந்தார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக படத்தின் ஹீரோக்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆடும் நாட்டுக் கூத்து பாடல் சூப்பர் ஹிட்டானது.
நாட்டு கூத்து பாடலில் இடம்பெறும் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரின் நடன காட்சிகளை பலரும் ரீ கிரியேட் செய்திருந்தனர். இன்ஸ்டாகிராமில் இதுதொடர்பான ரீல்ஸ்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.
இந்நிலையில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நடைபெற்ற விழாவில் படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக பங்கேற்றிருந்தனர். கோல்டன் குளோப் விருது பாடலுக்கு இசையமைத்த கீரவாணிக்கு அளிக்கப்பட்டது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ராஜமவுலி மற்றும் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
MM Keeravaani’s #GoldenGlobes2023 acceptance Speech!! ❤️🔥❤️🔥 #RRRMovie #NaatuNaatu pic.twitter.com/9q7DY7Pn5G
— RRR Movie (@RRRMovie) January 11, 2023
THANK YOU Keeravani and Rajamouli for making us proud and bringing home the Golden Globe for Indian cinema.@mmkeeravaani @ssrajamouli
— Rajinikanth (@rajinikanth) January 11, 2023
இதுதொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய சினிமாவுக்கு கோல்டன் குளோப் விருதை பெற்றுத் தந்ததற்காக கீரவாணி மற்றும் ராஜமவுலிக்கு நன்றி’ என்று கூறியுள்ளார். இதேபோன்று ஏ.ஆர்.ரகுமான், சல்மான் கான் உள்பட பல்வேறு திரை பிரலபங்களும் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajamouli, Rajinikanth