ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாட்ஷா படத்துக்கும் லால் சலாம் படத்துக்கும் இப்படியொரு ஒற்றுமையா?

பாட்ஷா படத்துக்கும் லால் சலாம் படத்துக்கும் இப்படியொரு ஒற்றுமையா?

பாட்ஷா - ரஜினிகாந்த்

பாட்ஷா - ரஜினிகாந்த்

'லால் சலாம்' படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

லால் சலாம் படத்துக்கும் ரஜினிகாந்தின் பாட்ஷா படத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இத்திரைப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மாலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் சாண்டல்வுட் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணையவுள்ளார் ரஜினி. அதில் பவர்ஃபுல்லான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இதற்கிடையே இப்படத்தில் ரஜினி, முஸ்லிம் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், 'பாட்ஷா' படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் முஸ்லிம் கதாபாத்திரமாக இது இருக்கும்.

'பாட்ஷா'வில், ரஜினி மாணிக்கமாக நடித்தார், படத்தில் தனது நெருங்கிய முஸ்லிம் நண்பர் இறந்துவிட, அவர் நினைவாக பாட்ஷா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். லால் சலாம் படத்தில் அவர் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்தால், இது தான் இப்படி அவர் நடிக்கும் முதல் முறையாக இருக்கும்.

மீண்டும் பி.வாசுவுடன் இணையும் ரஜினிகாந்த்?

'லால் சலாம்' படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth