Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி - கமல் முதன்மை விருந்தினர்களாகபங்கேற்பு

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி - கமல் முதன்மை விருந்தினர்களாகபங்கேற்பு

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பொன்னி நதி மற்றும் சோழா சோழா என 2 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினராக பங்கேற்பார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வனை 2 பாகங்களாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். முதல் பாகம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை வெளியிட உள்ளனர். பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பொன்னி நதி மற்றும் சோழா சோழா என 2 பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

    2 பாகங்களாக வெளிவருகிறது வெற்றி மாறனின் ‘விடுதலை’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

    இதேபோன்று பொன்னியின் செல்வன் டீசரும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆகியவை நாளை மறுதினம் சென்னை நேரு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்தியதேவன் கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



    இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்துள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Kamal Haasan, Ponniyin selvan, Rajinikanth

    அடுத்த செய்தி