Home /News /entertainment /

44 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்காகும் ரஜினி-கமல் கிளாசிக் படம்... நடிகர்கள் யார் தெரியுமா?

44 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்காகும் ரஜினி-கமல் கிளாசிக் படம்... நடிகர்கள் யார் தெரியுமா?

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

ரஜினிகாந்த் - கமல் ஹாசன்

'பானா காத்தாடி' புகழ் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் 'அவள் அப்படித்தான்' படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ரஜினிகாந்த் - கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இருவரும் தங்களின் தனித்துவமான பாதையில் பிரிந்து செல்ல முடிவு செய்வதற்கு முன்பு, கிட்டத்தட்ட இரண்டு டஜன் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். அவர்களது காம்போ படங்களில் பெரும்பாலானவை ஆக்ஷன் என்டர்டெய்னர்களாக இருந்தாலும் சில குடும்பக் கதைகள் மற்றும் பெண்களை மையமாகக் கொண்டவைகளும் அடங்கும்.

    மறைந்த இயக்குநர் சி. ருத்ரய்யா இயக்கிய 'அவள் அப்படித்தான்' கமல் - ரஜினி நடிப்பில் வெளியான கிளாசிக் படங்களில் ஒன்று. இது சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆண் ஆதிக்க சமூகத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இளம்பெண் ஸ்ரீபிரியாவின் போராட்டங்களை இப்படம் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதில் ஆணாதிக்கவாதியாக ரஜினியும், முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞராக கமலும் நடித்திருந்தனர்.

    'பானா காத்தாடி' புகழ் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் 'அவள் அப்படித்தான்' படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் படத்தின் ஒரிஜினல் இயக்குனர் ருத்ரய்யா காலமானதால் படத்தின் உரிமையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே தற்போது அந்த சிக்கல்கள் சரியாகி வருவதாக தெரிகிறது.

    கவலைகளை மறக்கச் செய்து மீனாவின் பிறந்தநாளை சிறப்பாக்கிய தோழிகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து 'அவள் அப்படித்தான்' படத்தில் ஸ்ருதிஹாசன் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், ரஜினி மற்றும் கமல் நடித்த வேடங்கள் முறையே சிம்புவும், ஃபஹத் பாசிலும் நடிக்கிறார்கள் என்றும் பத்ரி வெங்கடேஷ் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kamal Haasan, Rajinikanth

    அடுத்த செய்தி