ஜெயிலர் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக மங்களூரு சென்ற ரஜினிகாந்த்.
'அண்ணாத்தே' படத்தின் வெற்றிக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் வெளியீட்டிற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் இன்னும் தயாரிப்பில் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 12-ம் தேதி சென்னையிலிருந்து மங்களூருவுக்குச் சென்றார். 'ஜெயிலர்' படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக சென்றார் ரஜினி. இந்தப் படப்பிடிப்பில் சிவ ராஜ்குமார் இடம்பெறும் சில முக்கியமான காட்சிகளை படமாக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஜெய்சால்மீரில் நடந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களின் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் 2023 கோடையில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Thalaivar enroute To Mangalore ✈️#Jailer with #Shivarajkumar in almost full black beard#Rajinikanth pic.twitter.com/bxrcvZlrc9
— Rajini Trends Page ᴶᴬᴵᴸᴱᴿ (@RajiniTrendPage) February 12, 2023
தமன்னா, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth