Rajinikanth: அண்ணாத்த டப்பிங்கில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த்

ரஜினி

தனியார் ஸ்டுடியோவில் அண்ணாத்தயின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

  • Share this:
    அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் தொடங்கியுள்ளது. ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை பேசியுள்ளார்.

    அண்ணாத்த படத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றால் பலமுறை படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், இந்த வருடம் தேர்தலுக்கு பின் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம்சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர். பிறகு சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்தது, சில காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    rajinikanth, rajini, annaatthe, annaatthe movie, annaatthe shooting, annaatthe dubbing, annaatthe dubbing started, அண்ணாத்த, அண்ணாத்த படம், அண்ணாத்த திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், அண்ணாத்த டப்பிங்
    ரஜினிகாந்த்


    சில வாரங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ், அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி ஆகஸ்டில் அண்ணாத்தயின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர். நவம்பர் 4-ம் தேதி படம் திரைக்கு வரும்.

    தற்போது சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் அண்ணாத்தயின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக ரஜினி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். விரைவில் அவரது அடுத்தப் படம் குறித்த செய்தியை வெளியிட இருக்கிறார். அந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸே தயாரிக்கும் என்கின்றன தகவல்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: