ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Jailer: 50 சதவீத படபிடிப்பை முடித்த ரஜினியின் ஜெயிலர் படக்குழு

Jailer: 50 சதவீத படபிடிப்பை முடித்த ரஜினியின் ஜெயிலர் படக்குழு

ஜெயிலர்

ஜெயிலர்

கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த்ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் நடந்து வருகிறது. இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிந்துள்ளது.

    நடிகர் அஜித் போல பைக் பயணம்... இமயமலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவிருக்கிறது. வேலைகளை முடித்து ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் படக்குழுவினர்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth