Home /News /entertainment /

முழு வீச்சில் ரெடியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் செட்! ஷூட்டிங் எப்போது தெரியுமா?

முழு வீச்சில் ரெடியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர் செட்! ஷூட்டிங் எப்போது தெரியுமா?

ஜெயிலர்

ஜெயிலர்

இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் குறித்து நெல்சன் திலீப்குமார், ரஜினியுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறார்

    ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நெல்சன் திலீப்குமாருடன் நடிகர் ரஜினிகாந்த் இணையும் அடுத்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கிடையே தற்போது, ஹைதராபாத்தில் இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான 'அண்ணாத்த' படத்தின் பெரும்பகுதி, கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தில் செட் அமைத்து படமாக்கப்பட்டது. அதேபோல், 'ஜெயிலர்' படத்தின் பெரும்பகுதியை ஹைதராபாத்தில் செட் அமைத்து எடுக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆகையால் தற்போது செட் போடும் வேலைகள் நடந்து வருகின்றன. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

    2011-ல் மறுபிறவி எடுத்த ரஜினிகாந்த்... நினைவுக்கூர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்!

    இதற்கிடையில், படத்தின் இறுதிக்கட்ட ஸ்கிரிப்ட் குறித்து நெல்சன் திலீப்குமார், ரஜினியுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறார். மேலும் தனது பாணியில் கதையை உருவாக்க இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளாராம் ரஜினி. குறிப்பாக ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனரின் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைத்தையும் நெல்சனையே பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டாராம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!

    ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, படப்பிடிப்பு தொடங்கும் முன்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு இசை அனிருத்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி