Home /News /entertainment /

அடுத்தப்படம் குறித்து முடிவெடுக்காத ரஜினிகாந்த்? காரணம் என்ன?

அடுத்தப்படம் குறித்து முடிவெடுக்காத ரஜினிகாந்த்? காரணம் என்ன?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த என்ற அண்ணன் - தங்கை சென்டிமென்ட் படத்தில் நடித்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் படத்தின் இயக்குநர் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்திய அறிக்கையின்படி, நெல்சன் திலீப்குமாருடன் ரஜினிகாந்த் கைகோர்ப்பதாக கூறப்பட்டது.

    ஆனால் அவர் தனது அடுத்த படத்திற்காக கதைகள் எதுவும் இதுவரை கேட்கவில்லை என்று தெரிகிறது. ரஜினிகாந்த் சில மாதங்களாக திரைப்படங்களில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2022-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அவர் தனது புதியப்படம் குறித்து முடிவெடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை தலைவர் 169 படத்தை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில், தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இருப்பினும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்த படம் குறித்து முடிவெடுக்கும் வரை காத்திருப்போம்.

    தமிழ் சினிமாவின் அடுத்த காதல் ஜோடி... கெளதம் கார்த்திக்-மஞ்சிமாவுக்கு விரைவில் டும் டும் டும்!

    ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த என்ற அண்ணன் - தங்கை சென்டிமென்ட் படத்தில் நடித்தார். அதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக அவர் சில பட வாய்ப்புகளையும் மறுத்துவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி