ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மகள் செளந்தர்யாவின் Hoote App-ஐ அறிமுகப்படுத்திய ரஜினி!

மகள் செளந்தர்யாவின் Hoote App-ஐ அறிமுகப்படுத்திய ரஜினி!

ரஜினிகாந்த் - செளந்தர்யா

ரஜினிகாந்த் - செளந்தர்யா

குரல் பதிவு கொண்ட முதல் சமூக வலைதள செயலியான Hoote App-ஐ நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தனது மகள் செளந்தர்யாவின் Hoote ஆப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

  நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று காலையில் டெல்லியில் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு பிறகு இவ்விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான்.

  அதோடு ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷும் இன்று தேசிய விருது பெற்றார். ஏற்கனவே ஆடுகளம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், தற்போது அசுரன் படத்திற்காக தனது இரண்டாவது விருதைப் பெற்றுள்ளார்.

  ஒரே நாளில், ஒரே மேடையில் ரஜினிகாந்தும், தனுஷும் மிக முக்கியமான விருதுகளைப் பெற்றது அவர்களது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  குரல் பதிவு கொண்ட முதல் சமூக வலைதள செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  தாதா சாகேப் விருது பெற்ற ரஜினி, அது குறித்த செய்தியோடு இந்த செயலியின் பயன்பாட்டை துவங்கி வைத்திருக்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Rajinikanth