Home /News /entertainment /

Puneeth Rajkumar : புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினி நெகிழ்ச்சியான இரங்கல்

Puneeth Rajkumar : புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினி நெகிழ்ச்சியான இரங்கல்

புனித் ராஜ்குமார் - ரஜினிகாந்த்

புனித் ராஜ்குமார் - ரஜினிகாந்த்

Rajinikanth Condolences On The Death Of Puneeth Rajkumar : கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியான இரங்கல் தெரிவித்துள்ளார். 

    கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார் கடந்த 29 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு இந்திய திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

    அவரது இறுதிச்சடங்குக்கு செல்ல முடியாத பிரபலங்கள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா போன்றோர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நேற்று நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வுமான உதயநிதி புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்

    புனித் ராஜ்குமார் மரணமடைந்த போது ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அவரது மறைவுக்கு ரஜினிகாந்தால் இரங்கல் தெரிவிக்க முடியாமல் போனது. இன்று தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியில் புனித் ராஜ்குமார் மரணத்துக்கு ரஜினி இரங்கல் தெரிவித்தார்

    also read : பிரபல நடன இயக்குனர் கூல் ஜெயந்த் புற்றுநோயால் காலமானார்

    "நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார். அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்."இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி