ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி - காரணம் இதுதான்!

சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி - காரணம் இதுதான்!

சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி

சரத்குமாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமாரை, தனது இல்லத்திற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரை தனது இல்லத்திற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த 30ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த ஜெயம்ரவி, கார்த்தி உள்ளிட்ட பலரையும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.  அத்துடன் அவர்கள் நடிப்பு குறித்தும் பாராட்டு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமாரை, தனது இல்லத்திற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Also read... ரோலெக்ஸ் எப்போ வரும்... நடிகர் சூர்யா கூறிய தகவல் - வைரலாகும் வீடியோ!

அப்போது சரத்குமார் நடிப்பு குறித்தும், படம் குறித்தும் பல்வேறு விஷயங்களை இருவரும் விவாதித்துள்ளனர்.  பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெரிய பழுவேட்டையராக தான் நடிப்பதாக இயக்குநர் மணிரத்னத்திடம் ரஜினிகாந்த் கூறிய போதும், நடிகர் சரத்குமாரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது நடிகை வரலட்சுமி சரத்குமாரும் உடன் இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor sarath kumar, Rajinikanth