ரஜினிகாந்துக்கு ஒரு ’பவர்’ இருக்கு - பாரதிராஜா!

ரஜினிகாந்துக்கு ஒரு ’பவர்’ இருக்கு - பாரதிராஜா!
ரஜினியுடன் பாரதிராஜா
  • Share this:
நடிகர் ரஜினிகாந்த்தை அனைவருக்கும் பிடிக்க காரணம் 'பவர்' என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் வேலூரில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, ரஜினியின் அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கும் அவருக்கும் 48 ஆண்டுகால நட்பு உள்ளது. ஐயப்பன், மதுரை மீனாட்சி என ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பவர் இருக்கிறது. அதேபோல் மனிதர்களுக்கும் தனித்தன்மை உள்ளது. அது அவரவருக்கான தனித்தன்மை. எல்லோரும் பாரதிராஜா ஆகிவிட முடியாது. எல்லோராலும் ரஜினி ஆகிவிட முடியாது. அவருக்கு ஒரு பவர் உள்ளது.


தயாரிப்பாளர் தாணு பேசுகையில், தமிழ் சினிமாவில் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வரலாறு படைத்துள்ளனர். அவர்களின் மரபுவழி வந்தவராக ரஜினியைப் பார்க்கிறேன். அவர் நல்ல மனிதர் என்பதால் தான் பிரதமரே அவரை வீட்டில் சென்று சந்தித்தார். இவர்தான் தமிழகத்துக்கு துணையானவர். ரஜினி வென்று காட்டுவார். உயர்ந்து நின்று காட்டுவார்" என்றார்.

Also see:
First published: December 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading