ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லைகாவுடன் ரஜினியின் அடுத்தடுத்து 2 படங்கள்!

லைகாவுடன் ரஜினியின் அடுத்தடுத்து 2 படங்கள்!

ரஜினி

ரஜினி

தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த இரண்டு திரைப்படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... செவ்வந்தி சீரியல் நடிகையை ஏமாற்றிய செல்லம்மா சீரியல் ஹீரோ சித்து..

லைகா நிறுவனத்தில் ஏற்கனவே 2.0 மற்றும் தர்பார் ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அதில் 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 750 கோடி ரூபாய் வசூல் செய்தது. இருந்த போதிலும், அந்த படத்தின் பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கவில்லை. அதேபோல் தர்பார் திரைப்படம் லைகா நிறுவனத்திற்கு லாபத்தை கொடுக்கவில்லை. அதை ஈடு செய்யும் வகையில் தற்போது இரண்டு படங்களில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

Published by:Shalini C
First published:

Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth