ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இவருக்கு பதிலாக இவர்! - ரஜினிகாந்த்தின் 'தலைவர் 171'-ஐக் கைப்பற்றிய சூப்பர்ஹிட் பட இயக்குநர்?

இவருக்கு பதிலாக இவர்! - ரஜினிகாந்த்தின் 'தலைவர் 171'-ஐக் கைப்பற்றிய சூப்பர்ஹிட் பட இயக்குநர்?

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரு வெற்றிபெற்றிருக்கிறது. இதன் காரணமாக ரஜினியுடன் பிரதீப் இணையவிருக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படமும், நெல்சனின் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், இருவரும் ஜெயிலர் படத்தில் அதீத கவனம் செலுத்திவருகின்றனர். படையப்பா படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துவருகிறார்.

இந்த நிலையில் லைக்கா புரொடக்சனுக்கு ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதில் ஒன்றான அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் சொன்ன முழு திரைக்கதையைப் படித்த ரஜினிகாந்த்துக்கு திருப்திகரமானதாக இல்லையாம். சிபி சக்கரவர்த்தியுடன் இணையும் முடிவை ரஜினிகாந்த் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறார்.

இதன் ஒரு பகுதியாக தலைவர் 171 படத்துக்கு லவ் டுடே பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பரிசீலனையில் இருக்கிறார் என்கிறது புது தகவல். பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இதன் காரணமாக ரஜினியுடன் பிரதீப் இணைய வாய்ப்பு என்ற தகவல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

First published:

Tags: Aishwarya Rajinikanth, Lyca, Rajinikanth