ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஸ்டைலாக ஃப்ளையிங் கிஸ்.. தீபாவளி வாழ்த்து.. வீட்டு வாசலில் குவிந்த ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

ஸ்டைலாக ஃப்ளையிங் கிஸ்.. தீபாவளி வாழ்த்து.. வீட்டு வாசலில் குவிந்த ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

ரஜினி

ரஜினி

இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் போயஸ் கார்டன் வீடு அருகே அவரைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  போயஸ் கார்டனில் வீட்டிற்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினி நேரில் வந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

  ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் அடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

  இதற்கிடையே ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலமாக மிகப் பெரும் சரிவை சந்தித்துள்ளார். இந்தப்படத்தின் மோசமான ரிசல்ட்டுக்காக விஜய் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனை திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவர் ஜெயிலர் படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார்.

  அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60% முடிவடைந்துள்ளது. தீபாவளி பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி நவம்பர் இறுதியில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

  Also read... பொங்கலுக்கு ரிலீசாகிறது விஜய் நடிக்கும் வாரிசு! அசத்தல் லுக்குடன் அப்டேட் விட்ட படக்குழு!

  இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை 'டான்' பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், 'தலைவர் 171' படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

  இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் போயஸ் கார்டன் வீடு அருகே அவரைக் காண ரசிகர்கள் கூடியிருந்தனர். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களுக்கு கை அசைத்துக் கொண்டே அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Deepavali, Rajinikanth