Home /News /entertainment /

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ரஜினிகாந்த் அறக்கட்டளை

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் ரஜினிகாந்த் அறக்கட்டளை

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    ரஜினிகாந்த் அறக்கட்டளை தமிழக மாணவர்கள் 100 பேருக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் நிலைத் தேர்வுகளுக்கு, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு ரஜினிகாந்த் அறக்கட்டளை பயிற்சி அளித்து தயார்படுத்தும் என ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் தெரிவித்தார். இந்த திட்டத்தை வழக்கறிஞர் எம்.சத்ய குமார் நிர்வகிப்பார் என்றும், ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் படிக்க - நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ரஜினி. அதோடு தனது குடும்பத்தினருடன் அவர் கொண்டாடிய பிறந்தநாள் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth, Tamil Cinema

    அடுத்த செய்தி