ரசிகர்களுக்கென்று பிரத்யேக காட்சிகள் இப்போது பரவலாக நடத்தப்படுகின்றன. எண்பது, தொண்ணுnறுகளில் ரஜினி, கமல் படங்கள் வெளியாகும் போது ரசிகர் மன்றக் காட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும். விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களின் படங்களுக்கும் சிறப்பு ரசிகர் மன்றக் காட்சிகள் நடத்தப்பட்டதுண்டு.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்களை அப்பகுதி ரசிகர் மன்றத்தினர் மொத்தமாக வாங்கிக் கொள்வார்கள். பிறகு டிக்கெட் கட்டணத்தைவிட பல மடங்கு அதிக தொகைக்கு ரசிகர்களுக்கு அது விற்கப்படும்.
அந்த ரசிகர் மன்றக் காட்சியில் முதல்நாள் முதல் ஷோ படம் பார்ப்பது என்பது அன்று சாகசமாக கருதப்பட்டது. ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரசிகர்களின் ஆர்வத்தை பணம் பண்ணுவதற்கு பயன்படுத்திக் கொண்டதால் இதற்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. நாளடைவில் ரசிகர் மன்றக் காட்சி பல இடங்களில் ஒழிக்கப்பட்டது. இப்போது திரையரங்குகளே ரசிகர் மன்ற நிர்வாகிகளைப் போல் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிகபடியான கட்டணம் வசூலிக்கின்றன.
ரஜினி படங்களுக்குதான் தமிழகத்தில் அதிகமாக ரசிகர் மன்றக் காட்சிகள் திரையிடப்படும். அதிகாலையிலேயே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
இதையும் படிங்க - கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் பரிசளித்த அஜித்!
ரசிகர்களுக்கென பிரத்யேகமாக படம் திரையிடப்படும் வழக்கத்தை ரஜினி படங்களுக்கு தொடங்கி வைத்தவர்கள் திருச்சி ரசிகர்கள். படம் காளி.
1979 இல் மலையாளப்பட இயக்குனர் ஐ.வி.சசி கமல், ரஜினியை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை இயக்கினார். தமிழ், மலையாளம் இரு மொழிகளில் படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து காளி திரைப்படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்கினார்.
இதையும் படிங்க - பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை
தமிழில் ரஜினியின் நண்பராக விஜயகுமார் நடித்தார். தெலுங்குப் பதிப்பில் விஜயகுமார் நடித்த வேடத்தில் சிரஞ்சீவி நடித்தார். 1980 ஜுலை 3 ஆம் தேதி காளி தமிழிலும், அதே வருடம் செப்டம்பர் 19 தெலுங்கிலும் வெளியானது.
ஜுலை 3 ஆம் தேதி காளி வெளியான அன்று திருச்சி ரஜினி ரசிகர்கள் பிரத்யேக ரசிகர் மன்றக் காட்சிக்கு ஏற்பாடு செய்தனர். அன்று காளி முதல் காட்சிக்கு திருச்சி சென்ட்ரல் திரையரங்கை குத்தகைக்கு எடுத்து, ரசிகர்களுக்கு பிரத்யேக டிக்கெட்களை விநியோகித்தனர். அன்று முதல் காட்சியை ரஜினி ரசிகர் மன்றம் நடத்தியது. ரஜினி மன்ற ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்படி ரஜினி படங்களுக்கு பி[ரத்யேக ரசிகர் மன்றக் காட்சியை திருச்சி ரசிகர்கள் காளி படத்தில் அறிமுகப்படுத்தினார்கள்.
இன்று ரஜினி படம் வெளியானால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரசிகர் மன்றக் காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஆனால், அதற்கெல்லாம் விதை போட்டது திருச்சி ரசிகர்கள், ஆண்டு 1980 ஜுன் 3, படம் காளி.
துரதிர்ஷ்டவசமாக காளி சரியாகப் போகவில்லை. சென்னையில் படம் 56 தினங்கள் மட்டுமே ஓடியது. அதேநேரம், ஐ.வி.சசி இயக்கத்தில் அதே 1980 ஆம் ஆண்டு, ஒரு மாதம் கழித்து ஜுலை 19 கமல் நடித்த குரு தமிழ், தெலுங்கில் வெளியானது. இந்திப் படத்தின் ரீமேக்கான இது இரு மொழிகளிலும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. தமிழில் இந்தப் படம் 365 நாள்கள் ஓடியது முக்கியமானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth