ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாபா ரீ-ரிலீஸூக்கு டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த்!

பாபா ரீ-ரிலீஸூக்கு டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரீ-ரிலீஸ் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதால், அட்டகாசமாக வெளியாகும் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா மறு வெளியீட்டை முன்னிட்டு, அதற்கான டப்பிங் பணிகளை முடித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் ஆகஸ்ட் 15, 2002 அன்று திரைக்கு வந்தது. தற்போது மீண்டும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படத்தின் மறு வெளியீட்டிற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்திற்கான டப்பிங்கை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் செய்து முடித்துள்ளார். படத்தின் சில புதிய காட்சிகளுக்காக அவர் டப்பிங் செய்திருப்பதாக தெரிகிறது.

கவலையற்ற நாத்திகரான ரஜினிகாந்துக்கு, பாபாஜி (நிஜ வாழ்க்கையில் ரஜினியின் ஆன்மீக குருக்களில் ஒருவர்) ஏழு வரங்களை வழங்குவார். அது அவரை எப்படி அரசியலுக்கு அழைத்துச் செல்கிறது என்பதே பாபா படத்தின் கதை. இந்தப் படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி, சுஜாதா, எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

ஒருவழியாக டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட்டை தெரிந்துக் கொண்ட பாரதி... விறுவிறுப்பாகும் பாரதி கண்ணம்மா!

ரீ-ரிலீஸ் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்பதால், அட்டகாசமாக வெளியாகும் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். டிஜிட்டல் தளங்களில் படம் இல்லாததால், மறு வெளியீடு திரையரங்குகளில் நன்றாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth