ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Rajinikanth: ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

Rajinikanth: ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

அந்த சீரியலை தனது குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருவதாகவும் ரஜினிகாந்த் கூறினாராம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியலை தான் விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் 'ஜெயிலர்' படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ரஜினி. அதில் ஒன்றை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்துக்கு லால் சலாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்னொரு படத்தை டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாகக் கூறப்படுகிறது.

தேவதையாய் தீபிகா படுகோன்... கவனம் பெறும் புகைப்படங்கள்!

' isDesktop="true" id="847479" youtubeid="kJkZR8Q2kpA" category="cinema">

இதற்கிடையே பிரபல சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வத்தின் நண்பர் ஒருவர், ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்து பேசினாராம். அப்போது சன் டிவியில் தற்போது திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தான் தனக்கு மிகவும் பிடித்த ஒன்று எனக் கூறினாராம் ரஜினி. அதோடு அந்த சீரியலை தனது குடும்பத்தினர் தொடர்ந்து பார்த்து வருவதாக ரஜினி கூறியதாக, நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருச்செல்வம். இவர் இதற்கு முன்பு தேவயானி நடிப்பில் மெகா ஹிட்டான கோலங்கள் சீரியலை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth, Sun TV, TV Serial