#அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே... ட்விட்டரை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்

Sheik Hanifah | news18
Updated: April 18, 2019, 6:30 PM IST
#அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே... ட்விட்டரை தெறிக்கவிட்ட ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த்
Sheik Hanifah | news18
Updated: April 18, 2019, 6:30 PM IST
அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ர்ண்டாக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள்.

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த ரஜினிகாந்த், எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்புக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர்.


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...