அன்றே சொன்ன ரஜினி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

அன்றே சொன்ன ரஜினி... ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்

ரஜினிகாந்த்

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பதை கடந்த டிசம்பர் மாதமே தனது அறிக்கையில் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியிருந்ததை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

  • Share this:
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறி 3 பக்க அறிக்கை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

கொரோனா பரவல், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்த ரஜினிகாந்த் தனது அறிக்கையில், “என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருப்பதையும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல் தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையம் காரணமாக இருந்ததாக உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம், தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ததே தொற்று பரவலுக்கான காரணம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் நீங்க காதில் வாங்கவில்லை. உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை. தேர்தல் ஆணையத்தை காட்டமாக விமர்சித்துள்ளார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

தேர்தல் நாளான்று உரிய பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு பிரசாரம் நடந்தபோதேல்லாம், வேற்று கிரகத்தில் இருந்தீர்களா என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும், சுகாதாரத்துறை செயலர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனரிடம் உரிய ஆலோசனை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இப்போது நீதிமன்றம் கூறும் காரணத்தை முன்கூட்டியே கணித்ததாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published: