Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

என்னது! விஜய் சூப்பர் ஸ்டாரா? கோபத்தில் பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் - பரபரப்பு சம்பவம்

என்னது! விஜய் சூப்பர் ஸ்டாரா? கோபத்தில் பத்திரிகையாளரின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள் - பரபரப்பு சம்பவம்

ரஜினிகாந்த் - விஜய்

ரஜினிகாந்த் - விஜய்

ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர் தான் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு மற்றும் துணிவு படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து யார் நம்பர் 1 என இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார், தில் ராஜு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுவருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் பத்து பேர் பத்திரிகையாளர் பிஸ்மியின் வீட்டுக்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரஜினி குறித்து யூடியூபில் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமா பத்திரிகையாளரின வீட்டுக்கே சென்று ரஜினி ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறினேன் என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்று அவர் தான் எப்பொழுதும் சூப்பர் ஸ்டார் என்பதை அவர் நிரூபிப்பார் என்பது அவரது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்கவிருக்கிறார்.  தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சிங் சத்தா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துவரும் அவர், அடுத்தாக லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Actor Vijay, Rajinikanth