• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அருவருப்பான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் - ரஜினி ரசிகர் மன்றம் அட்வைஸ்

அருவருப்பான செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வேண்டாம் - ரஜினி ரசிகர் மன்றம் அட்வைஸ்

ரஜினி கட்அவுட்

ரஜினி கட்அவுட்

அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ரசிகர்கள் ஆடு வெட்டி ரத்த அபிஷகம் செய்த சம்பவத்திற்கு ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். நயன்தாரா நாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், சதீஷ், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் மோசன் ஃபோஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் ஃபோஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போது அண்ணாத்த ஃபர்ஸ்ட்லுக் கட்அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலானது.

    கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.



    இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றமும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இது வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: