Home /News /entertainment /

2011-ல் மறுபிறவி எடுத்த ரஜினிகாந்த்... நினைவுக்கூர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்!

2011-ல் மறுபிறவி எடுத்த ரஜினிகாந்த்... நினைவுக்கூர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சிகிச்சை முடிந்து இயல்புக்கு திரும்பியதும் தான் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

    கடந்த 2011-ம் ஆண்டு மிகவும் உடல்நலம் குன்றிய ரஜினிகாந்த் இதே தேதியில் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார். இந்த நாளை தலைவர் ரீபார்ன் டே-வாக இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் அவரது ரசிகர்கள். 

    கடந்த 2011-ல் 'ராணா' படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்து‌க்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் 2 முறை சென்னை இசபெல்லா மரு‌த்துவமனை‌யிலு‌ம், அதன் பிறகு போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை‌யிலு‌ம் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அவருக்கு நவீன சிகிச்சை அளிக்க, விமானம் மூலம் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ர‌ஜி‌னிகா‌ந்து‌க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ஒருமாத‌ம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பார்த்திபன்... வித்தியாச முயற்சிகளை செய்ய துடிக்குற கலை ரசிகன் - ரஜினிகாந்த் பாராட்டு!





    சிகிச்சை முடிந்து இயல்புக்கு திரும்பியதும் தான் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அவர் சிகிச்சை முடிந்து இதே ஜூலை 13, 2011-ல் தான் வீடு திரும்பினார். ஆகையால் அவர் மீண்டும் திரும்பி வந்ததைக் கொண்டாடும் நோக்கில், இந்நாளை தலைவர் ரீபார்ன் டே-வாக இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி