காஷ்மீர் விவகாரம்: விமர்சனத்திற்கு ரஜினி விளக்கம்!

காஷ்மீர், பயங்கரவாதிகளின் தாய் வீடாக உள்ளது. இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை. அதை ராஜதந்திரத்தோடு மோடியும், அமித்ஷாவும் கையாண்டிருக்கிறார்கள்.

news18
Updated: August 14, 2019, 7:17 PM IST
காஷ்மீர் விவகாரம்: விமர்சனத்திற்கு ரஜினி விளக்கம்!
ரஜினிகாந்த்
news18
Updated: August 14, 2019, 7:17 PM IST
காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமானது. அதை ராஜதந்திரத்தோடு மோடியும், அமித்ஷாவும் கையாண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், "தமிழ்த் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

காஷ்மீர், பயங்கரவாதிகளின் தாய் வீடாக உள்ளது. இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்னை. அதை ராஜதந்திரத்தோடு மோடியும், அமித்ஷாவும் கையாண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் தான் அதை பாராட்டினேன். எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என்பதை சில மதிப்புமிக்க அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.


தமிழகத்தின் அரசியல் மையமாக மீண்டும் போயஸ் கார்டன் உருவாகுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், “காத்திருந்து பாருங்கள். கட்சி அறிவிப்பு எப்போது என்பதை ஊடகங்கள் முன்பு அறிவிப்பேன்” என்றார்.

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...