முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி - ரஜினி

சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி - ரஜினி

மனைவி லதாவுடன் ரஜினிகாந்த்

மனைவி லதாவுடன் ரஜினிகாந்த்

தண்ணி அடிப்பேன், சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது. அப்போதே அப்படி என்றால் பேரு புகழ் வந்ததுக்கு பிறகு எப்படி என யோசித்து பாருங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் "சாருகேசி" நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார் . பின்னர் விரைவில் படமாக்கப்பட உள்ள அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பையும் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு மேடையில் பேசினார்.

அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''நான் ஆரோக்கியமா இருக்க காரணம் என் மனைவி தான். கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்க வழக்கம் இப்படி இருந்ததை ஒதுக்கினேன். நான் கண்டக்டர் ஆக இருந்தபோது இரண்டு வேளையும், நான் வெஜ் தான்.

தண்ணி அடிப்பேன், சிகரெட் எத்தனை பாக்கெட் போகும் என்றே தெரியாது. அப்போதே அப்படி என்றால் பேரு புகழ் வந்ததுக்கு பிறகு எப்படி என யோசித்து பாருங்கள். இதுபோல இருந்த என்னை "அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா" என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Rajinikanth