ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

''இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு போவார்னு எதிர்பார்க்கல...'' உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்

''இவ்வளவு சீக்கிரம் நம்மைவிட்டு போவார்னு எதிர்பார்க்கல...'' உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நடிகர் ரஜினிகாந்த்தின் நண்பரும் ரசிகர் மன்ற நிர்வாகியுமான வி.எம்.சுதாகர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.எம் சுதாகர் கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தபோது, அவரது மருத்துவ செலவை ரஜினிகாந்த் ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த வி.எம்.சுதாகருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனையடுத்து வி.எம்.சுதாகர் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வி.எம்.சுதாகரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''என் மேல் அவர் மிகுந்த அன்பும் பாசமும் வச்சிருந்தார். கடந்த 2 வருஷமா அவர் உடம்பு கொஞ்சம் சரியில்ல. அவரைக் காப்பாற்ற ரொம்ப முயற்சி பண்ணோம். இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மை விட்டு போவார்னு எதிர்பார்க்கல. அவர் எப்ப பார்த்தாலும் நான் மகிழ்வா சந்தோஷமாக இருக்கணும் தான் நினைப்பார். மிகவும் நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பரை நான் இழந்திருக்கிறேன்'' என்றார்.

ரஜினிகாந்த் திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அடுத்த ஆண்டு வி.எம்.சுதாகர் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இருந்தே நடிகர் ரஜினிகாந்த் வி.எம்.சுதாகர் ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் புகழ் பெற்ற நடிகராக மாறிய போதும் அவர்களுடைய நட்பு தொடர்ந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் நிர்வாகியாக செயல்பட்ட சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது வி.எம்.சுதாகரை அழைத்து தன்னுடைய ரசிகர் மன்றத்தை பார்த்துக் கொள்ள கூறியிருந்தார்.

அதன் முதல் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக வி.எம். சுதாகர் செயல்பட்டு வந்தார். மேலும் ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்ட போதும் அதன் தலைமை நிர்வாகியாக வி.எம் சுதாகர் செயல்பட்டார்.

First published:

Tags: Fans, Rajinikanth