ஹோம் /நியூஸ் /entertainment /

’சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு ரஜினியின் சாய்ஸ் ஐஸ்வர்யாராய்தான் ...ஜோதிகா நடிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை ’ - மனம் திறந்த பி.வாசு!

’சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு ரஜினியின் சாய்ஸ் ஐஸ்வர்யாராய்தான் ...ஜோதிகா நடிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை ’ - மனம் திறந்த பி.வாசு!

ரஜினி மற்றும் ஜோதிகா

ரஜினி மற்றும் ஜோதிகா

சந்திரமுகி படத்தில் நடிக்க வைக்க சாய்ஸாக இருந்தவர் ஐஸ்வர்யா ராய்தான். ’சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு முதல் சாய்ஸ் ஐஸ்வர்யா ராய்தான்... ஜோதிகா நடிப்பதில் ரஜினிக்கே உடன்பாடில்லை’ - பி.வாசு!

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  நமக்கு பிடித்த பல படங்களை கொடுத்த ஒரு சினிமா செலிபிரிட்டிதான் பி.வாசு. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழிகளில் படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக சந்திரமுகி படத்தை இயக்கியவர் பி.வாசு இதுவரை 64 படங்களை இயக்கியுள்ளார். இன்றும் இவர் படங்கள் தொலைக்காட்சிகளில் டிஆர்பியை உயர்த்து இருக்கிறது.

  இவர் இயக்கியத்தில் ரஜினிகாந்த் நடிப்பில்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 

  2004 இல் வெளியான கனடா படம் அப்தமித்ராவின் ரீமேக் தான் சந்திரமுகி. இந்த படத்தில் நடித்தற்காக தமிழக அரசின் சிறந்த நடிகை என்ற விருதை ஜோதிகா பெற்றார். மேலும் ஜோதிகா கலைமாமணி விருதும் பெற்றவர். ஆனால் ஜோதிகா இப்படத்தில் நடிப்பதற்கு முதல் தேர்வாக இருக்கவில்லை என்றும் அவர் நடிப்பதில் ரஜினிக்கே உடன்பாடு இல்லை என்றும் படத்தின் இயக்குநர் பி.வாசு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  அதுமட்டுமல்ல படையப்பா படத்தில் கூட ஐஸ்வர்யாராய், ராம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருக்கலாம் என்றும் நினைத்தார். காரணம் ஒரு கதாபாத்திரம் கதையை தாங்கி பிடிக்கும்போது, அதில் ஐஸ்வர்யா ராய் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார். ஆனால் அந்த அளவிற்கு நாங்கள் செல்லவில்லை.

  முதலில் நடிகை சிம்ரனை சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கதான் நான் முடிவு செய்திருந்தேன். அதன் பின்னர்தான் ஜோதிகாவை நடிக்க வைத்தோம். ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது கூட ரஜினிக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை.

  அதற்கு வலுவான காரணம் உண்டு. சந்திரமுகி ஒரு கம்பீரமான கதாபாத்திரம். அனால் ஜோதிகா அப்போது ஜாலியாக விஜய், சூர்யாவுடன் ஒரு ஜாலி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தார். குஷி படம் வந்த நேரம் அது குஷி கதாபாத்திரம் ஒரு அருமையான கரெக்ட்டர். அந்த படங்கள் எல்லாம் ரஜினி பார்த்து இருப்பார். அவர் சந்திரமுகி போன்ற ஒரு வேடத்தில் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. ஜோதிகா நடித்த அனைத்து படங்களும் bubbly ஆனா பெண் என்ற கதாபாத்திரத்தில்தான் நடித்து இருப்பார்.

  அதேபோல ஜோதிகா கண்கள் நடனமாடும் அவரை கவனமாக பார்த்து இருந்தால் உங்களுக்கு தெரியும். சிம்ரனை சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக கண் அசைவுகளை காட்டும் காட்சியை அந்தப்படத்தில் வைத்திருக்க மாட்டேன்’ என்றார்.

  Read More:’மேரேஜுக்காக 4 வருஷம் காத்திருந்தாங்க’.. சூர்யா-ஜோதிகா குறித்து மனம் திறந்த சிவக்குமார்!

  தொடர்ந்து பேசுகையில், அதேநேரம் படம் வெளியான பிறகு ஒரு முறை ரஜினி என்னிடம் பேசினார். அப்போது, நான் நடிக்கவில்லை என்றாலும் சந்திரமுகி ஓடும். ஆனால் ஜோதிகா நடிக்கவில்லை என்றால் ஓடியிருக்காது என்று கூறினார் என்றும் அந்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress Jothika, Rajinikanth