திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தன்னை உருவாக்கிய இயக்குநர் பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை எத்தனையோ விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்த விருது ரஜினிக்கும், உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்களுக்கும் ரொம்பவே ஸ்பெஷல்!
தமிழ் சினிமாவில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குநர் பாலச்சந்தரும் மட்டுமே இந்த தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த உயரிய விருதைப் பெற்ற மூன்றாவது நபர் ரஜினி தான். கடந்த மார்ச் மாதம் இவ்விருது அறிவிக்கப்பட்டு, டெல்லியில் இன்று வழங்கப்பட்டன.
இதற்காக நேற்று சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார்
ரஜினி. இந்த நேரத்தில் இயக்குநர் பாலச்சந்தர் இல்லாததை நினைத்து உணர்ச்சிவசப்பட்டார். டெல்லியில் நடைப்பெற்று 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு
தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. முன்னதாக அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அப்போது ரஜினிகாந்தின் திரை பயணம் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் மோகன்லால், குஷ்பு, அமிதாப் பச்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்த்து செய்திகள் பெற்றிருந்தன. ரஜினிகாந்தை 'அசாதாரணத்திற்கு அப்பால்' என்று குறிப்பிட்டார் அமிதாப் பச்சன். தொடர்ந்து தாதா சாகேப் பால்கே
விருதைப் பெற்றுக் கொண்ட ரஜினி, இதனை தனது, வழிகாட்டி மற்றும் குருவாக இருந்து தன்னை உருவாக்கிய இயக்குநர் கே பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.