இன்று வெளியாகிறது 'தர்பார் செகண்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

news18
Updated: September 11, 2019, 12:21 PM IST
இன்று வெளியாகிறது 'தர்பார் செகண்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தர்பார் பட போஸ்டர்
news18
Updated: September 11, 2019, 12:21 PM IST
தர்பார் படத்தின் செகண்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.


இந்நிலையில் படத்தைத் தயாரித்து வரும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பதோடு இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் செகண்ட் லுக் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அனிருத், தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



வீடியோ பார்க்க: அடுத்து என்ன செய்ய போகிறார் ரஞ்சித்?

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...