தர்பார் திரைப்படத்தின் மிரட்டலான செகண்ட் லுக்!

தர்பார் திரைப்படத்தின் மிரட்டலான செகண்ட் லுக்!
தர்பார் செகண்ட் லுக்
  • News18
  • Last Updated: September 11, 2019, 6:13 PM IST
  • Share this:
தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.


சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தர்பார் திரைப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத், படத்தின் இசைவெளியீட்டு விழா நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் படையப்பா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் சட்டையில்லாமல் ஆக்ரோஷமாக தோன்றியுள்ளார்.வீடியோ பார்க்க: அடுத்து என்ன செய்ய போகிறார் ரஞ்சித்?

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்