முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு

அனுமதியின்றி ரஜினியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை - வெளியான அதிரடி அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் ரஜினிகாந் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் மோகன்லால், கன்னட திரையுலகின் பிரபல நடிகர் சிவராஜ்குமார், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்து.

இந்த நிலையில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஜெயிலர் படம் பான் இந்தியன் படமாக உருவாவதால் அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதியின் சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்  நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல்  வணிக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்  ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படங்கள் மற்றும் குரலை அவரது  அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்திருந்தது. இந்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

First published:

Tags: Rajinikanth