ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Rajinikanth: ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

Rajinikanth: ரஜினிகாந்தும் அவர் கடந்து வந்த முக்கிய சர்ச்சைகளும்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார் ரஜினி. இது அவரது ரசிகர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Rajinikanth: ரஜினிகாந்த்... இந்த பெயர், தமிழகம், இந்தியாவில் மட்டுமல்ல, கடல் கடந்தும் பிரபலம். ’சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்’ என்ற பாடலில் குறிப்பிட்டதைப் போல, ரஜினியை தெரியாதவர் என யாருமே இல்லை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் பல முரண்பாடுகள் இருந்தாலும், ரஜினியை திரையில் ரசிக்காத கண்களையும், அவர் பஞ்ச் டயலாக்குகளுக்கு தட்டாத கைகளையும் வெயில் காலத்து வெந்நீர் எனலாம். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் தனிப்பட்ட வாழ்க்கையில் பலமுறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அவற்றில் முதன்மையான சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஜெயலலிதாவுடன் மோதல்

1991 சட்டசபைத் தேர்தல் சமயத்தில், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அந்த சூழலை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, எதிர்க்கட்சிகளையெல்லாம் தன் வசப்படுத்தி, முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். ”எல்லாமே நான் தான்” என்ற அதிகார தோரணை அப்போதே அவரிடம் அழுத்தமாக ஒட்டிக் கொண்டது. ஜெ.ஜெ அரிசி, ஜெ.ஜெ போக்குவரத்துக் கழகம் என எல்லாத் திட்டங்களிலும் ஜெயலலிதாவின் பெயர் தான் முன்னிலைப்படுத்தப்பட்டது. மக்கள் நல திட்டங்கள் மட்டுமின்றி, திரைப்பட நகருக்கும் தன் பெயரையே சூட்டிக் கொண்டார் ஜெயலலிதா. இது திரையுலகினருக்கே அதிருப்தியை தந்தது.

Rajinikanth and his major controversies, rajinikjanth jayalalithaa issue, rajinikanth jayalalithaa controversy, rajinikanth periyar issue, rajinikanth periyar controversy, rajinikanth thoothukudi shootout, rajinikanth political entry, rajinikanth age, rajinikanth birthday, rajinikanth wife, rajinikanth - twitter, rajinikanth family, rajinikanth tamil movie, rajinikanth son, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பிறந்தநாள், ரஜினிகாந்த் வயது, ரஜினிகாந்த் பிறந்தநாள் போஸ்டர், ரஜினிகாந்த் ஜெயலலிதா சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு
ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த்

திரைப்பட நகருக்கு தமிழ் சினிமாவின் முன்னோடிகள் சிவாஜி கணேசன் அல்லது எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் என்பது தான் தமிழ் திரையுலகினரின் விருப்பமாக இருந்தது. ரஜினிகாந்தின் விருப்பமும் அதுதான். அதன் பின் சில மாதங்கள் கழித்து சிவாஜிக்கு ’செவாலியே விருது’ வழங்கும் விழா நடந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரஜினி, ”நீங்கள் திறந்து வைத்த ஃபிலிம் சிட்டிக்கு சிவாஜி பெயரை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதைச் செய்யவில்லை. அவரை மதிக்கவில்லை. அது தவறு. தவறு செய்வது மனித இயல்பு. தவற்றைத் திருத்திக் கொள்வது மனிதத்தனம்” என்று பேச, அரங்கில் கைதட்டல் மழை.

Rajinikanth and his major controversies, rajinikjanth jayalalithaa issue, rajinikanth jayalalithaa controversy, rajinikanth periyar issue, rajinikanth periyar controversy, rajinikanth thoothukudi shootout, rajinikanth political entry, rajinikanth age, rajinikanth birthday, rajinikanth wife, rajinikanth - twitter, rajinikanth family, rajinikanth tamil movie, rajinikanth son, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பிறந்தநாள், ரஜினிகாந்த் வயது, ரஜினிகாந்த் பிறந்தநாள் போஸ்டர், ரஜினிகாந்த் ஜெயலலிதா சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு
படையப்பா படத்தில்...

அதன் பின் பல மேடைகளில் ஜெயலலிதாவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கினார் ரஜினி. பின்னர் 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில், “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது” என்றார். அந்தத் தேர்தலில் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோற்றுப் போனார். அதிமுக போட்டியிட்ட 168 இடங்களில் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக மாபெரும் வெற்றியடைந்தது. மேலும் ரஜினியின் மன்னன் படத்தில் சாந்தி தேவி, படையப்பாவில் நீலாம்பரி என எப்போதெல்லாம் அவர் படத்தில் அழுத்தமான பெண் கதாபாத்திரம் இடம்பெறுகிறதோ, அதை வில்லியாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ரஜினிக்கு எதிர் முனையில் இருக்கும் அந்த பெண் கதாபாத்திரங்கள் ஜெயலலிதாவை மனதில் வைத்து எழுதப்பட்டவை என பேச்சுகள் எழுந்தன. இப்படி ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த ரஜினி, பின்னாளில் அவரை ’தைரிய லட்சுமி’ என்று குறிப்பிட்டதும் வரலாற்றில் இல்லாமல் இல்லை.

எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது

திருவிளையாடல் படத்தில் சிவாஜிக்கும் நாகேஷுக்கும் வரும் உரையாடலைப் போல பிரிக்க முடியாதது, ரஜினியும் அவரது அரசியல் ஆசையும் என சொல்லலாம். ரஜினி புகழின் உச்சியை அடையும் போதே, அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்வியும் பிரபலமானது. ஆனால் கன்னித்தீவு கதைப் போல, அதற்கு முடிவே இல்லாமல் மனம் வாடினார்கள் ரஜினி ரசிகர்கள்.

முத்து படத்தில் ’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’ என பஞ்ச் டயலாக் பேசியிருப்பார். அரசியலுக்கு வருவதைத்தான் அவர் இப்படி மறைமுகமாக சொல்வதாக குஷியானார்கள் ரசிகர்கள். பின்னர் ‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு கொடுத்தது தமிழல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா?’ என படையப்பாவில் பாடிய ரஜினி, “முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன், முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன், என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன், வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்... உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன், கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என பாபாவில் பாடினார். ஆக மொத்தம் அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு மட்டும் சரியான பதில் இல்லாமல் இருந்தது.

Rajinikanth and his major controversies, rajinikjanth jayalalithaa issue, rajinikanth jayalalithaa controversy, rajinikanth periyar issue, rajinikanth periyar controversy, rajinikanth thoothukudi shootout, rajinikanth political entry, rajinikanth age, rajinikanth birthday, rajinikanth wife, rajinikanth - twitter, rajinikanth family, rajinikanth tamil movie, rajinikanth son, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பிறந்தநாள், ரஜினிகாந்த் வயது, ரஜினிகாந்த் பிறந்தநாள் போஸ்டர், ரஜினிகாந்த் ஜெயலலிதா சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு
முத்து

பின்னர் 2018-ம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என, ரஜினி சொன்ன முடிவு அவரது ரசிகர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியது. இருப்பினும் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல், அவ்வபோது ரசிகர்களை மட்டும் சந்தித்து வந்தார். இது மீண்டும் ரசிகர்களை சோர்வடைய வைத்தது. பின்னர் 2020-ல் கொரோனா வந்தது, அப்போது 2021 சட்ட மன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும், தேர்தல் களப்பணியில் இறங்கினார்கள். அப்போதும் கூட தனது அரசியல் நிலைபாட்டை திட்டவட்டமாக அறிவிக்காமல் இருந்தார் ரஜினி. பின்னர் 2020 டிசம்பர் இறுதியில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தார் ரஜினி. இது அவரது ரசிகர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

நான் தான்பா ரஜினிகாந்த்

2018-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த முற்றுகைப் போரட்டத்தில் கலவரம் ஏற்படவே, அதை அடக்க துப்பாக்கிச்சூடு நடத்தினர் போலீசார். அதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது இந்திய அளவில் பேசு பொருளானது. இந்த பிரச்னையை தொடர்ந்து, எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்று குறிப்பிட்ட ரஜினிகாந்த், துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல தூத்துக்குடி சென்றார். அப்போது ‘யார் நீங்க?’ என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கேட்டதும், “நான் தான்பா ரஜினிகாந்த்” என்றது இணையத்தில் ட்ரெண்டானது. பின்னர் ”போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி, மாவட்ட ஆட்சியரகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர்” என்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார் ரஜினிகாந்த்.

Rajinikanth and his major controversies, rajinikjanth jayalalithaa issue, rajinikanth jayalalithaa controversy, rajinikanth periyar issue, rajinikanth periyar controversy, rajinikanth thoothukudi shootout, rajinikanth political entry, rajinikanth age, rajinikanth birthday, rajinikanth wife, rajinikanth - twitter, rajinikanth family, rajinikanth tamil movie, rajinikanth son, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பிறந்தநாள், ரஜினிகாந்த் வயது, ரஜினிகாந்த் பிறந்தநாள் போஸ்டர், ரஜினிகாந்த் ஜெயலலிதா சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது

தன்னை உச்சத்தில் அமர வைத்து அழகு பார்க்கும் மக்களுக்கு, தேவையான நேரத்தில் உடன் நிற்கும் அறத்தை பின்பற்ற தவறியதாக ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசிடம், சமீபத்தில் அறிக்கை சமர்பித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், “ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தது.

காவி உடையில் வள்ளுவராக ரஜினிகாந்த்... மதுரை ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்

துக்ளக் மேடையில் பெரியார் பேச்சு

கடந்த 2020-ம் ஆண்டு நடந்த துக்ளக் 50-ம் ஆண்டு விழாவில், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், அதனை துக்ளக் பத்திரிகை மட்டுமே தைரியமாக வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார் ரஜினிகாந்த். அவரின் இந்த பேச்சுக்கு பெரியாரிய இயக்கங்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் ரஜினியின் பேச்சு இருந்ததாக காவல்துறையிலும் அவர் மீது புகாரளித்தனர்.

Rajinikanth and his major controversies, rajinikjanth jayalalithaa issue, rajinikanth jayalalithaa controversy, rajinikanth periyar issue, rajinikanth periyar controversy, rajinikanth thoothukudi shootout, rajinikanth political entry, rajinikanth age, rajinikanth birthday, rajinikanth wife, rajinikanth - twitter, rajinikanth family, rajinikanth tamil movie, rajinikanth son, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் பிறந்தநாள், ரஜினிகாந்த் வயது, ரஜினிகாந்த் பிறந்தநாள் போஸ்டர், ரஜினிகாந்த் ஜெயலலிதா சர்ச்சை, ரஜினிகாந்த் பெரியார் சர்ச்சை, ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு
பெரியார் குறித்த சர்ச்சையின் போது

விமர்சனத்துக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் என இங்கு யாருமே இல்லை. ஆகவே ரஜினியின் ஸ்டைலுக்கும், மாஸான திரை ஆளுமைக்கும் ரசிகர்கள் பொழியும் அன்பு மழையில் எந்த குறைவும் ஏற்படாது என்பதில் மிகையில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth, Tamil Cinema