அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் வழி பேரனும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக இருந்து, நடிகரானார். பின்னர் அரசியலில் நுழைந்து 2018-ம் ஆண்டு இளைஞரணி செயலாளரானார். 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கண்டார்.
சட்டமன்ற உறுப்பினரான உதய், தனது தொகுதியில் சிறப்பாக பணியாற்றி மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றார். இதையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இன்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் உதயநிதி. இதையடுத்து அவருக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த்?
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ரஜினிகாந்த், உதய்க்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.