கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவருக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்

கொரோனாவுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவருக்கு ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்
ரஜினிகாந்த்
  • Share this:
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் சித்தா சிகிச்சை அளிக்க சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ள சித்த மருத்துவர் வீரபாபு இதுவரை 900-க்கும் மேற்பட்ட கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணமடைய வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் 90 வயது வரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் தமிழக அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இங்கே சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதிலும் ஒரு சதவீதம் கூட இறப்பு விகிதம் இல்லாமல் முழுமையான குணம் அடைந்து வருவதாக மருத்துவர் வீரபாபு கூறுகிறார்.


வீரபாபு


இந்த செய்திகளைக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை அவருடைய தொலைபேசி எண்ணுக்கு  திடீரென்று  அழைத்துள்ளார். அப்போது பேசிய ரஜினிகாந்த், “உங்கள் சேவையைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். சித்த மருத்துவ முறையில் பலரை குணமடைய வைத்துள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் சேவை பாராட்டக்கூடிய ஒன்று.

விரைவில் உங்களை சந்திக்க வேண்டும். ஆனால் தற்போது ஊரடங்கு இருக்கிறது. எனவே விரைவில் இந்த நிலை எல்லாம் மாறிய பிறகு நிச்சயமாக இல்லத்திற்கு வாருங்கள் நாம் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.நிச்சயமாக சந்திக்கலாம் என்று மருத்துவர் வீரபாபு தன் சேவையை பாராட்டியதற்கு  நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading