’எனக்காக டிஃப்ரண்டா ஒரு கதை பண்ணுங்க...’ இளம் இயக்குநரிடம் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

’எனக்காக டிஃப்ரண்டா ஒரு கதை பண்ணுங்க...’ இளம் இயக்குநரிடம் ரஜினிகாந்த் வைத்த கோரிக்கை
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: July 30, 2020, 9:18 PM IST
  • Share this:
கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" நடிகர் துல்கர் சல்மான், கவுதம் மேனன், நித்து வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் நடித்த இப்படத்தை  தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார்

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்படுவதற்கு முன், இந்தப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த இந்தப்படத்தை OTT தளமான நெட்பிளிக்ஸிலும் அதிகம் பேர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் இந்த திரைப்படத்தை பார்த்துள்ளார். பின்னர், படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமியை ரஜினியை தொடர்பு கொண்டு "எக்ஸலன்ட்! சூப்பர்!.. படம்! ஸ்சாரி இவ்ளோ நாளா.. இந்த படத்தை பார்க்காமல் விட்டுவிட்டேன். உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. படம் மிக சுவாரஸ்யமாக இருந்தது நல்ல திரைப்படம்...’ என்று அடுக்கடுக்காக பாராட்டியுள்ளார்.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனக்காக ஒரு படத்தை எடுக்க கதை யோசியுங்கள்; ஏதாவது டிஃபரண்டா யோசிச்சு சொல்லுங்க எனக் கூறிவிட்டு காட் பிளஸ் யூ என வாழ்த்தி  போனை வைத்துள்ளார்.
படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?

படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த இயக்குனர் தேசிங் பெரியசாமி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.  இந்த படத்திலும் பல இடங்களில் ரஜினியின் புகைப்படம், ரஜினியின் பழைய பட வசனங்கள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார்
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading