Rajinikanth: தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து!

Rajinikanth: தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து!

ரஜினிகாந்த்

சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  • Share this:
    சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்திய சினிமாவில் ஒரு கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது இந்த வருடம் நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் தெரிவித்தார். இந்த விருது தங்க தாமரை (கோல்டன் லோட்டஸ்) பதக்கம், ஒரு சால்வை மற்றும், 10,00,000 ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. கடந்த 2018-ம் வருடம் இந்த தாதா சாஹேப் பால்கே விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

    Rajinikanth: ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!

    இந்நிலையில் இந்த வருடம் இவ்விருதிற்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தவிர மற்ற அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் ரஜினிக்கு தங்கள் வாழ்த்துகளை கூறியுள்ளனர். அதில் சில பதிவுகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

    Rajinikanth: ‘தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது’ ரஜினிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

    ரஜினிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கும் கமல்...





    51-வது தாதா சாஹேப் பால்கே விருது பெரும் ரஜினிகாந்திற்கு சன் பிக்சர்ஸின் வாழ்த்து...



    சினிமாவில் உங்கள் பங்களிப்பு ஈடு இணையற்றது என நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.



    தாதா சாஹேப் பால்கே விருதுக்கு நீங்கள் மிக தகுதியானவர் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்திற்கு தெரிவித்துள்ளார்.



    இந்த விருதுக்கு மிக சரியான தேர்வு என நடிகை நதியா குறிப்பிட்டுள்ளார்.



    எளிய குடும்பத்திலிருந்து வந்து இவர் செய்திருக்கும் சாதனை மற்றவர்களுக்கு நிச்சயம் ஊக்கமளிக்கும் ஒன்று என மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.



    நடிகர் விக்ரம் பிரபு வாழ்த்து...



    மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய மனிதனுக்கு... எல்லா தடைகளையும் தாண்டி, வாழ்க்கையில் முன்னுக்கு வர என்னை ஊக்கப்படுத்திய மனிதனுக்கு, இந்த விருது பெற மிக தகுதியானவருக்கு வாழ்த்துகள் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: