ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்துக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ்!

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் படத்துக்கு ரஜினிகாந்தின் சாய்ஸ்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நந்தினி கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. கல்கி இருந்திருந்தால் அவர் வீட்டுக்கு சென்று காலில் விழுந்திருப்பேன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது சில நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நினைத்து படித்ததாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

    பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்னத்துடன் பணியாற்றிய அனுபவம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.

    நான் புத்தகம் அதிகம் படிப்பேன். முதலில் புத்தகத்தின் பக்கம் என்ன என கேட்பேன். 200, 300 பக்கங்கள் என்றால் ஓகே. பொன்னியின் செல்வன் பக்கத்தை கேட்டதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த பக்கம் போகவில்லை.

    ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வந்திய தேவன் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார். அதை கேட்ட உடன் எனக்கு குஷியாகிவிட்டது. உடனே கொண்டுவாட புத்தகத்தை என்றேன். படித்தால் போயிகிட்டே இருக்கிறது. நந்தினி கதாபாத்திரம் அவ்வளவு சிறப்பாக இருந்தது. கல்கி இருந்திருந்தால் அவர் வீட்டுக்கு சென்று காலில் விழுந்திருப்பேன்.

    பொன்னியின் செல்வன் படத்துக்காக கமலிடம் ரஜினிக்கு சிபாரிசு செய்த சிவாஜி!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பொன்னியின் செல்வன் கதை படிக்கும் போது அருள்மொழியாக கமல், ஆதித்த கரிகாலனாக விஜயகாந்த், நந்தினியாக இந்தி நடிகை ரேகா, குந்தவையாக ஸ்ரீதேவி, பெரியபழுவேட்டையராக சத்யராஜ் ஆகியோரை நினைத்துகொண்டதாக அப்போது பேசினார் ரஜினிகாந்த்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Ponniyin selvan, Rajinikanth