Home /News /entertainment /

தேசியக்கொடியை ட்விட்டர் புரொபைல் பிக்சராக மாற்றிய ரஜினிகாந்த்!

தேசியக்கொடியை ட்விட்டர் புரொபைல் பிக்சராக மாற்றிய ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ட்விட்டரில் 6.2 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ரஜினிகாந்த், உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் ரஜினிகாந்த் தேசிய கொடியை தனது ட்விட்டர் புரொஃபைல் பிக்சராக மாற்றியுள்ளார். 

    இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடுகிறோம். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி என்ற திட்டத்தின்படி, ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    அதோடு மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புரொஃபைல் பிக்சராகவும் தேசியக் கொடி படத்தை வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரபலங்களும் பொதுமக்களும் தங்கள் சமூக வலைதள புரொபைல் பிக்சர்களை மாற்றி வருகின்றனர்.

    மீனா, ரம்பா உள்ளிட்ட 90’ஸ் நடிகைகளுக்கு பார்ட்டி வைத்த பிரபுதேவா!

    இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது புரொபைல் பிக்சரை மூவர்ண தேசியக்கொடியாக மாற்றியிருக்கிறார். ட்விட்டரில் 6.2 மில்லியன் பின் தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ரஜினிகாந்த், உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருக்கிறார்.

    rajinikanth, rajini, rajinikanth twitter profile picture, rajinikanth twitter, rajinikanth national flag, rajinikanth independence day, rajinikanth modi, jailer, jailer movie, jailer shooting, ட்விட்டர் புரொபைல் பிக்சரை மாற்றிய ரஜினி, ரஜினிகாந்த் ட்விட்டர், ரஜினிகாந்த் ட்விட்டர் படம், 75-வது சுதந்திர தினம், தேசியக்கொடி புரொபைல் பிக்சர்
    ரஜினிகாந்த் ட்விட்டர்


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது அவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி