முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'சூப்பர்.. எக்ஸலண்ட்..' 'தனி ஒருவன்' இயக்குனரை பாராட்டித் தள்ளிய ரஜினி.! தெலுங்கால் கிடைத்த பெருமை!

'சூப்பர்.. எக்ஸலண்ட்..' 'தனி ஒருவன்' இயக்குனரை பாராட்டித் தள்ளிய ரஜினி.! தெலுங்கால் கிடைத்த பெருமை!

காட்ஃபாதர், ரஜினி

காட்ஃபாதர், ரஜினி

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் இயக்குனர் மோகன் ராஜா ரீமேக் செய்தார். அதுவும் லூசிபர் கதையை தெலுங்குக்கு ஏற்றவாறு மாற்றம் செய்திருந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகியுள்ள காட்ஃபாதர் படத்தின் இயக்குநர் மோகன் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினி காந்த் வாழ்த்தியுள்ளார். 

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த லூசிபர் திரைப்படத்தை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் இயக்குனர் மோகன் ராஜா ரீமேக் செய்தார். அதுவும் லூசிபர் கதையை தெலுங்குக்கு ஏற்றவாறு மாற்றம் செய்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் சல்மான்கான் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  அதேபோல் நயன்தாரா படத்தின் நாயகியாக நடித்துள்ளார். இந்தப்  படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் காட்ஃபாதர் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த்,  இயக்குநர் மோகன் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார்.

Also read... அமெரிக்கா மட்டும் இல்லை... இந்த நாடுகளிலும் வசூலில் பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன்

அப்போது Excellent, Very Nice, Very interesting என அவர் பாராட்டியதாக மோகன் ராஜா மகிழ்ந்துள்ளார். அதுவும் லூசிபர் கதையை தெலுங்குக்கு தகுந்தவாறு மாற்றியது குறித்தும் ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்ததுடன், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணம் இது என்றும் மோகன் ராஜா பெருமிதம் அடைந்துள்ளார். காட்ஃபாதர் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth