ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்-பிரதீப் ரங்கநாதன்,

ரஜினிகாந்த்-பிரதீப் ரங்கநாதன்,

பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  லவ் டுடே திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

  கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

  குறிப்பாக இளைஞர்கள் அந்த திரைப்படத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் லவ் டுடே படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.  அதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் பகிர்ந்த அவர், இதைவிட என்ன கேட்க முடியும்.

  ஒரு சூரியனின் அருகில் இருந்தது போன்ற உணர்வு கொடுத்தது என தெரிவித்துள்ளார். அத்துடன் ரஜினிகாந்த் தன்னை கட்டி அணைத்து பாராட்டியதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

  போலி விபத்து காப்பீடு மோசடியை வெளிச்சம் போடும் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்’- எப்படி இருக்கிறது படம்?

  மேலும் ரஜினிகாந்த் என்ன ஒரு மனிதர். அவர் கூறிய வார்த்தைகளை மறக்கவே முடியாது எனவும் பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  ரஜினி காஸ்ட்யூமை அடியாள் கதாபாத்திரத்துக்கு தந்த ஏவிஎம்

  இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என திரை உலகில் கூறுகின்றனர். 6 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Rajinikanth, Tamil Cinema