Home /News /entertainment /

தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், போனி கபூர் வாழ்த்து

தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், போனி கபூர் வாழ்த்து

சூர்யா - ரஜினிகாந்த்

சூர்யா - ரஜினிகாந்த்

இளைஞர்கள் பலருக்கு ரோல் மாடலாக இருந்து வரும் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். – சுரேஷ் ரெய்னா

    தேசிய விருது வென்ற நடிகர் சூர்யாவுக்கு ரஜினிகாந்த், தயாரிப்பாளர் போனிகபூர், கிரிக்கெட் வீரர்  சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில், சூரரைப் போற்று படத்திற்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகியவற்றுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

    வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ், அக்சய் குமார் உள்பட பிரபலங்களின் பாராட்டு மழையில் சூரரைப் போற்று படக்குழு... 

    சிறந்த வசனகர்த்தா மற்றும் அறிமுக இயக்குனருக்கான விருதுகள் யோகி பாபு நடித்த மண்டேலா படத்திற்கு அறிவிக்கப்பட்டன.

    ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகிற்கு இந்தாண்டு 10  தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

    குறிப்பாக 5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து படம் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சூர்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    பணம் புகழை பார்த்துவிட்டேன்... அதில் சந்தோஷம் நிம்மதி இல்லை - நடிகர் ரஜினிகாந்த்

    இந்நிலையில் சூர்யாவை வாழ்த்தி ரஜினிகாந்த், போனிகபூர், சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளார்கள்.



    ரஜினி தனது ட்விட்டர் பதிவில், தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவுக்கும், சூரரைப் போற்று பட இயக்குநர் மற்றும் விருது பெறும் திரையுலகக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும் என்று கூறியுள்ளார்.



    முன்னணி தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டில், ‘சூர்யாவுக்கு இந்த நாள் மிகச்சிறப்பான நாளாகும். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறந்த நடிகராக தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டதிற்கும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.



    கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பதிவில், ‘இளைஞர்கள் பலருக்கு ரோல் மாடலாக இருந்து வரும் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்து வரும் ஆண்டிலும் உங்களுக்கு ஏராளமான வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Actor Suriya

    அடுத்த செய்தி