Rajinikanth Birthday: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி மதுரை ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள வாழ்த்து போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகக் கருதப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒரு நடிகர் முன்னணி நடிகராக எத்தனை வருடம் இருந்து விட முடியும்? ஏற்ற இறக்கம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வரும் பொதுவான ஒன்று. ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்கிறார் ரஜினிகாந்த். அவருக்கு முன்பு இத்தனை ஆண்டுகாலம், தமிழ் சினிமாவின் அரியணையை யாரும் இப்படி அலங்கரிக்கவில்லை. அவருக்கு பின்பும் யாரும் அதை செய்யப்போவதில்லை.
ரஜினியின் திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அவர் மேலுள்ள க்ரேஸ் மட்டும் எப்போதும் குறைந்ததில்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரையும் தனது ஸ்டைலால் கவர்ந்துள்ள ரஜினிக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள பிறந்தநாள் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ’வாழும் வள்ளுவரே’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டருடன் ரஜினியை காவி உடை அணிந்த திருவள்ளுவர் போன்று சித்தரித்து, "அவரினிது இவரினிது என்பர் ரஜினி புகழும் குணமும் அறியாதோர்" என்று புதிய குறளையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரை திருப்பரங்குன்றம் பகுதி நகர தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.
சொத்துக்காக நடந்த அவலம்... மூத்த நடிகையை கொலை செய்த மகன் - அதிர்ச்சியில் திரையுலகம்
ஏற்கனவே வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தமிழகத்தில் சர்ச்சையாகி வரும் நிலையில், தற்போது இந்த போஸ்டர் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth