நடிகர் ரஜினிகாந்த் தனது 72பிற-வது பிறந்தநாளை பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கொண்டாடினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12 ஆம் தேதி தனது 72-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன், குறிப்பாக அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவிட்டார் ரஜினிகாந்த். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளங்களில் அந்தப் படத்தைப் பகிர்ந்து, "இதைவிட அழகான ஒன்றை படம் பிடிக்க முடியாது. இதுபோன்ற சில பிணைப்புகளுக்கு தலைப்பிட முடியாது. எனது பர்த்டே பாயுடன் என் பையன்களுடன்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட அந்தப் படம் இணையத்தில் வைரலானது. அதே நேரத்தில் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பதாக கமெண்டுகளில் தெரிவித்தனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான படங்களைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ரசிகர்கள் தங்கள் அன்புக்குரிய நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை திருவிழாவாகக் கொண்டாடினர். அவரும் அவரின் திரைப்படங்களை உள்ளடக்கிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. ரஜினிகாந்தின் வரவிருக்கும் படங்களான 'ஜெயிலர்' மற்றும் 'லால் சலாம்' ஆகியவற்றின் இரண்டு அப்டேட்டுகள் அந்தந்த தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டன.
காசே தான் கடவுளடா... அஜித்தின் துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள்!
Cannot capture something more beautiful..
Cannot caption some such bonds ..
My birthday boy with my boys ! #grandfatherlove❤️ #grandsonsrock💙 pic.twitter.com/iCWLZ6b6n7
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) December 12, 2022
இதற்கிடையில், ரஜினிகாந்தின் நடிப்பில் 2002-ல் வெளியான ஃபேன்டஸி திரைப்படமான 'பாபா' சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக திரையரங்குகளில் மீண்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth